About Me

My photo
இந்த உலகம் எனக்கு(ம்)தான் சொந்தம் என்று நினைச்சுட்டிருக்கிற ஒரு அற்பபிறவி.

Saturday, January 31, 2015

முதல் பதிவாய்....

முதல் பதிவு அவனுக்காய்....


இது இன்றைய நாளில் ஒரு அறிமுகத்திற்காக எழுதப்படுகின்ற ஒரு பதிவாயிருந்தலும் இன்னும் ஒரு நாலைந்து வருடங்களின் பின்னும் இதே போல எழுதக்கூடிய சந்தர்ப்பம் கிடைத்துக்கொண்டிருக்கும் பட்சத்தில் இந்த முதல் பதிவை பார்க்கும் போது முதல் காதலை நினைப்பது போல் ஒரு சந்தோசம் எங்கோ ஒரு மூலையிலிருந்து ஜிவ்வென்று உடல் பூராய் பரவ வேண்டும்.
ஏன்னா???
எப்பவும் பெர்ஸ்ட் இம்பிரசன் இஸ் தி பெஸ்ட் இம்பிரசனா இருக்கனும்.

ஆனால் இப்போதைக்கு
  "நாளை வெறுங்கனவு அதேயேன் நம்பனும்
   நான் நட்டதும் ரோஜா இன்றே பூக்கனும்"


னு பாடிட்டு இதுவரைக்கும் வந்த பாதையை திரும்பி பார்க்கிறன்.
என்னோட ஒவ்வோரு காலடிக்கும் முன்னால வேற ஒரு காலடி தடம்.யாரோடது?

சும்மா நாலைந்து வயசிருக்கும் 
   அம்புலிமாமா கதைகள் எனக்கு வாய் வழியாக அறிமுகமான காலம் .எனக்கு வாசிக்க தெரியாது. "தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமாதித்தன் ......"என்னும் அந்த இத்தூண்டு வசனத்தை காதால கேட்காம கண்ணால வாசிக்கனும் என்கிற ஒரு ஆசை முளை விட ஒரு முக்கிய காரணம் அவன்தான்.கையில் வைத்து நான் பார்க்கும் விக்கிரமாதித்தன் தோளிலுள்ள வேதாளப்படத்துக்கு பக்கத்திலுள்ள எழுத்துக்களை வாசிக்க  அவனால் மட்டும் எப்டி முடிகிறது.

முதலாம் ஆண்டு இரண்டாம் ஆண்டு கடந்து மூன்றாம் ஆண்டுக்கு வந்த போது ஓரளவுக்கு வாசிக்க கூடிய திறன் வந்தது.அப்போதும் விக்கிரமாதித்தன் தோளில் வேதாளம் படம் பக்கத்தில் கதை.நானாய் வாசிப்பதில் பெருமை.

அதே கால கட்டத்தில் இன்னுமொரு அறிமுகம் இதுவும் அவன் மூலமாய்.கட்டம் போட்ட பெட்டிகளினுள் மண்டையோட்டு குகைகளினுள் மறைந்து வாழும் மாயாவி.
தொடர்ந்து டெக்ஸ் வில்லர்,மாடஸ்தி,டைகர்,பிளாஸ் கார்டன் எல்லாம் எல்லாம் அறிமுகம்.(என்ன கறுமம் எழுதுறான்.ஒரு அறுப்பும் விழங்கல்ல என்டு தோனிச்சுன்னா உடனடியா பேக் பண்ணி போய் Fb யோ இல்ல டுவிட்டரோ பாருங்க இதெல்லாம் ஆதி கால அதிசயங்கள்)

"கைகளில் நிறைய சங்கு வளையல்கள் போட்டு கழுத்தில் ஒரே ஒரு கறுப்பு மாலை.குதித்து குதித்து நடந்தாள்.எம்பிக்குதிக்கும் போது சலங்கை பேசியது.முழங்காலுக்கு மேல் ......"என்று இப்போது சுஜாதா வின் வசனத்துக்கு மனசுக்குள் அழகாய்  படம் வரையக்கூடிய அளவுக்கு திறமை வரக்காரணம் ராணி,லயன்,முத்து காமிக்ஸ்களை காட்டிய ........

அதிலிருந்து அப்படியே வளரும் போது அதே அவன் மூலமாய் சங்கர்லால் கொண்டு சாண்டில்யன் வரை எல்லா வகையான வரைட்டியான நாவலும் அறிமுகமாகியது.

பாட்டு.ஏதோ கேட்கிறான். என்ன இழவு இருக்கென்னு புரியல்ல. காலைல போடுற ரேடியோவை படுத்தப்புறமும் தூக்கத்தில் கேட்கிற வியாதி.எட்டு ஒன்பதில் ஏதோ இனம் புரியாத அதே...... ஓ....... இது ஏ.ஆர். இது ஹரிஸ் இது இளையராஜா பிரித்து அறிய உதவி கிடைத்தது.

பாட்டு ன்னா அதில இருக்கிற இசை முதல் வரி வரை எல்லாத்தையும் ரசிக்கனும் என்டு சொல்லிக்கேட்ட பின்னாடிதான்

 "அற்றைத் திங்கள் அந்நிலவில் நெற்றித்தரள நீர் வழிய கொற்றைப்பொய்கை யாடியவள் நீயா?"

முதல்

"தோசைக்கல்லு மேல் வெள்ளை ஆம்லட்டா ஒரு குட்டி நிலா குந்திக்கிட்டு....."

வரை எல்லாத்தையும் ரசிக்க முடிந்தது.


ஆக மொத்ததில் என்னால் அவனிடம் இருந்து கொப்பி அடிக்க முடிந்த அத்தனையையும் அடித்தேன்.
அடித்துக்கொண்டிருப்பேன்

ஒவ்வோருத்தனும் லைப்ஃல வேறொருத்தரை பார்த்து அவங்களோட ஹபிட்ஸை தெரிஞ்சோ தெரியாமலோ பொலோ  பண்ணி....... பாத்தரூமில ப்ரீயா இருக்கேக்க யோச்சுப்பாருங்க கட்டாயம் தெரியவரும்.

ஒரு ப்ரெண்டாய் 
ஒரு ரோல் மடலாய்
ஒரு கைட்டாய்
ஒரு மென்ரராய்

எல்லாமாயும் அவன்தான்.

இப்ப இதை எழுதுறதுக்கு பாதி இல்ல அதுக்குமஃ மேல காரணம் அவன்தான்.

அதால இந்த முதல் பதிவு அவனுக்கே போய் சேரட்டும்......send.....கிளிக்.

இப்படிக்கு 
இந்த உலகம் எனக்கு(ம்)தான் சொந்தம் என்று நினைச்சுட்டு இருக்கிற ஒரு
அற்பப்பிறவி.
.