About Me

My photo
இந்த உலகம் எனக்கு(ம்)தான் சொந்தம் என்று நினைச்சுட்டிருக்கிற ஒரு அற்பபிறவி.

Wednesday, June 28, 2017

தொட்டுக்க ஊறுகா - 01

இரண்டு மாதமாய் இறந்து போயிருந்த நான்+நீ யின் கல்லறையை பிளந்து பாடியை பெட்டியோடு நந்தா பர்வதத்திற்கு கொண்டு போய் லாஸரஸ் பிட்டினுள் மூன்று தரம் மொங்கி எடுத்து உயிர்தெழுப்பி இருக்கிறேன். எதிர்காலத்தில் நான் இறந்து போகாமல் பார்த்துக்கொள்வதற்கு நீ பொறுப்பு.

இதுவரை தமிழ் எழுத்துலகம் காணாத புது முயற்சி.(த்தூ)
இனி வருங்காலத்தில் ஒரு மாதத்தில் குறைந்தது இரண்டு ஊறுகாய் போஸ்டுக்களாவது வரும் என்று எதிர்பார்க்கலாம். அது பெரும்பாலும் அந்த மாதத்தில் நடந்த ஊறுகாய் சம்பவங்களை உள்ளடக்கியதாய் இருக்கும்.அதைத்தவிர  ஊறுகாய்க்கும் இந்த பதிவுக்கும் சம்பந்தம் இருக்குமா? என்றால் அடுத்து வரக்கூடிய பந்தியை தவிர வேறு எதுவும் கிடையாது.

ஊறுகாய் போத்தல் காலியாகி நான்கு நாளாகியிருந்தது. ஊறுகாய் என்பதை ஒருவராலும் ஊறாமல் சொல்ல முடியாது. பழஞ்சோறோ, வெறுஞ்சோறோ  ஊறுகாயை போட்டு குழைத்து எடுத்து தின்னும் போதுதான் வாழ்க்கையின் அர்த்தம் தெரியும். அன்னதானங்களில் பெயருக்குத்தான் ஊறுகாய் போடுவார்கள். ஊறுகாய் என்று தூக்கிப்பார்த்தால் அது உரிக்காத பூசணிக்காய் தோலாயிருக்கும். அதனாலோ என்னவோ பலருக்கும் அன்னதான ஊறுகாய்களின் மேல் ஒரு மதிப்பு கிடையாது. சரி வீட்டு ஊறூகாய்தான் கெத்து என்றாலும் அங்கேயும்  ஒரு பிரச்சினை இளிக்கும், எவ்வளவுதான் ஊறுகாயை கொட்டிக்கொட்டி குழைத்தாலும் ஒவ்வொரு வாய்க்கும் ஊறுகாய் வராது, பெரும்பாலும் வெறும்சோறுதான் வாய்க்குள் வரும்.இல்லாவிட்டால் எங்காவது ஒன்று அல்லது இரண்டு வாய்க்குள் முழு ஊறுகாயும் சேர்ந்து வரும்.ஊறுகாய் போத்தல் காலியாகி இன்றோடு ஆறாவது நாள். நாளைக்கு தின்பதற்கு ஊறுகாய் இல்லையே என்ற கவலையில்  கதிரையில் உறங்கிப்போய் விட ஊறுகாய் தேவதை கனவில் வருகிறது. ஒரு வரம் தருவதாய் சொல்கிறது. இரண்டு ஒப்ஷனும் தருகிறது.
01.அள்ள அள்ளக்குறையாத கண்ணாடியிலான ஊறூகாய் போத்தல் - உடையாமல் பாவிக்க வேண்டும்.
02.ஊறுகாயும் கிடையாது போத்தலும் கிடையாது, ஊறுகாய் சாப்பிடுவது எப்படி! என்ற ரகசியத்தை மட்டும் காட்டித்தருவதாக சொல்கிறது.
ஒன்றா? இரண்டா? என்று மனதுக்குள் ஒரு குழப்பம். இரண்டையும் கேட்கலாமா?  பேராசைக்கார ஊறுகாய்க்கொட்டியே! என்று விட்டு குளத்துக்குள் மூழ்கி விட்டால் வேண்டாம். ஊறுகாயும் போத்தலும் எப்போதும் முதலமைச்சரும் கூட்டமைப்பும் போல கைக்குள்ளால் நழுவுவது தெரியாமல் நழுவி இதுவரைக்கும். எத்தனை வீடுகள் எத்தனை போத்தல்கள் நாசாமாகியிருக்கிறது, ஒப்ஷனே வேண்டாம் இரண்டவதையே தா! என்று தேவதை முகம் பார்க்க... சிரிக்கிறது...பேராசைப்படாமல் இருந்ததினால் உனக்கு இரண்டையும் தருகிறேன் எனக்கூறி வலது கையில் அட்சய ஊறுகாய் போத்தலையும் இடது காதில் ரகசியத்தையும் சொல்லிவிட்டு செல்கிறது. கனவு கலைகிறது. கையில் நிஜமாகவே ஒரு போத்தல். அந்த ரகசியமும் தெளிவாய் ஞாபகத்தில் இருக்கிறது.
அந்த ர...க...சி...ய...ம் தான்.
தொட்டுக்க ஊறுகாய.

                        ××××××××××××

பலாப்பழ சீசனின் கடைசிப்பகுதியில் ஆனி மாதம் தத்தளித்துக் கொண்டிருக்க, வாடிக்கையாய் மரத்தோடு பழம் வாங்குபவன் வரவில்லை. புதிதாய் வந்தவன் காய் சின்னனாயிருக்கிறது ,உயரத்திலிருக்கிறது, பழுக்கவில்லை என்றான். சொன்னக்காரணத்திலும் குறைவாய் காசைக்காட்டினான். வியாபாரம் நடக்கவில்லை.போகும் போது மரத்தை பார்த்து திட்டினான்.

நின்ற மூன்று மரத்திலும் மொத்தமாய் 30 காய் இருந்தாலும்,  பழமாகும் போது ஒன்று  கூட வெட்டி தின்னப்போவதில்லை. இனிப்பில்லை, என்றொரு மூடநம்பிக்கை அல்லது மாயை. யாருக்கும் தானம் கொடுக்கப்படுமா? என்றால் கிடையாது. நமக்கு இனிப்பில்லை என்றால் மற்றவர்களுக்கு நாக்கில்லையா? ஆக மொத்ததில் பலாமரத்துக்கு பக்கத்தில் வைக்கோல் , வைக்கோலுக்கு பக்கத்தில் நாய்.

நேற்று, பெரிதாய் இருந்த ஒரு பழமாய் பார்த்து இரண்டு அணில்கள் கொந்தி கொண்டிருந்தது. தூரத்தில் தென்னையில் காகம், அணில் கொந்திவிட்டு போகும் வரை  காத்திருந்தது. மரத்தடியில் ஒரு அணிலாவது சமநிலை தவறி விழும்..லபக்... அமுக்கலாம் என்ற ஏம்பலிப்பில் பூனை. பூனைக்கு போட்ட பிஸ்கட்டை சுவர் வழியாய் எறும்புக்கூட்டம் கடத்திக்கொண்டிருந்தது. ஒரு அற்புதமான உணவு வலை காற்றில் தெரிந்தது. அண்ணர் கொக்கையோடு போய் அந்த பழத்தை அறுத்து வலையில் விழுத்தும்வரை. அணை கட்ட உதவிய பிற்பாடு, பலாப்பழம் பழுத்து விட்டது என்பதை காட்டித்தருகின்ற சிறந்த இன்டிக்கேட்டர்களாக எல்லா அணில்களும் தொழிற்பட்டு வருகின்றன.

வாழைப்பழத்தை தோல் உரிக்க வேண்டும் என்பதற்காகவும், பலாப்பழத்தில் பால் பிரளும் என்பதற்காகவும் இரண்டையும் உண்பதில் பெரிதாய் நாட்டம் கொள்வதில்லை. அதையும் தாண்டி தேன்கட்டி என்ற உவமையில் அயல் வீடுகளிலிருந்து பார்சல் பண்ணப்படும் பழங்களில் கைவைத்து விட்டு பசபசவென்று ஒட்டும் பலாப்பாலை பார்க்கும் போது அதை யார் முகத்திலாவது வைத்து தேய்க்க வேண்டும் போல் ஒரு வெறி வரும். நாக்கைத்தவிர மற்ற எல்லப்பாகமும் ஒன்றோடு ஒன்று ஒட்டிகொள்ளும். முடிந்து போன தேங்காய் எண்ணெய் போத்தலுக்குள் ஒவ்வொரு விரலாய் விட்டு  எண்ணெயை ஒத்தி எடுத்து பால் பிரண்ட  இடமெல்லாம் பிரட்டி கடைசியில் எண்ணெய் போக விம் சோப் போட்டு குளித்து விட்டு வந்திருக்கும் போது....

பக்கத்து வீட்டு சந்திரா மாமியின் "சீனிக்கட்டி" மேசையில் கிடந்து சிரிக்கும்.

தடவிப்பார்த்தால், காதுக்கு கீழ்பக்கமாய் ஏதோ ஒட்டுவது போலிருந்தது.

                         ×××××××××××××××

உதாரணத்திற்கு காப்மேயரின் "எண்ணங்களை மேம்படுத்துங்களில்" - ஒரு இருபது அத்தியாயம்,ரொபின் சர்மாவின்  who will cry? when u die? - ஒரு இரண்டு அத்தியா, இதற்கு மேலால் பேஸ்புக்கில் லைவ் மோட்டிவேசனோட சம்பந்தப்பட்ட அத்தனை பேஜ்களையும் சீயிங் பெர்ஸ்டில் விட்டு காலையில் போனை  எடுத்து பார்க்கும் போது எதிர்காலம் குமட்டிக்கொண்டு வந்து குட்மோர்னிங் சொல்லும்.

அட்வைசையும்,மோட்டிவேசன்களையும் அடுத்தவர் சொல்லி கேட்பதை விட படங்களிலும்,பக்கங்களிலும் பார்க்கும் போது ஏதோ உள்ளுக்குள் இருந்து " ஏற்றுக்கொள்ளேன்" என்று சொல்லும்.ஏற்றுக்கொள்வதும், ஏற்றுக்கொள்ளாததும் அடுத்ததடுத்த பந்திகளைப்பொறுத்தது.
அந்த கணம்,வரி,பக்கம்,பிரேமில் பார்க்கும் போது வாழ்க்கை தான் மாறப்போவதாக நினைத்து சிரித்து கொள்ளும்.

அந்த வரிசையில் கடந்த மாதங்களுக்குள் பார்த்து முடித்தபின்  புரட்டி எடுத்த படங்களுக்குள் ஒன்று டியர் ஷின்டகி தமிழ்படுத்தினால் அன்புள்ள வாழ்க்கை.

ஆலியா பாட் கைவேயில் அறிமுகமானதிலிருந்தே இதே முகம் ஏழாவதாய் எங்கே தட்டுப்பட்டது என்று மைண்ட்பலஸினுள் தேடியபோது ஆட்ஸ் பேட்ச் பூர்ணச்சந்திராவின் முகம் மேட்ச் ஆனது. ஒரே உயரம். சின்ன முகம், அதே பல்,அதே சிரிப்பு பின்னாமல் லூஸ் கேராய் விட்டால் டாமிட்... ஆலியாபாட்டின் டொப்ளகாங்கர் பூர்ணச்சந்திராதான், அடித்து சொல்லலாம்.



அழுதால் அழுகை, சிரித்தால் சிரிப்பு என்று பார்த்தவுடன் பச்சக்கென்று ஒட்டிக்கொள்ளக்கூடிய ஆலியா ஆஸ் கைரா அரைவாசிக்கு பிறகு வந்து இன்ரூ ஆகும் கிங் கான்.

அங்கே ஜெகாங்கீர் கான் பார்த்த வேலையை அண்ணருக்கு மெசென்சருக்குள்ளால் பார்ப்பதில் ஒரு இனம்புரியாத புளுகு கிடைத்து வந்தது. அண்ணருக்கு மட்டும் என்றில்லை யாருக்கென்றாலும் மோட்டிவேசன்களை வாரி வழங்குவதில் மகரராசி நேயர்கள் முதலிடம் பெறுவதாக அறிய முடிகிறது.

படம் பார்த்து முடிந்தவுடன் பைனல் எக்சாம் எழுதி சோகமே உருவாய் இருந்த அண்ணருக்கு படத்திலிருந்து உருவி

"Don't let the past,
Blackmail your present,
To ruin a beautiful furture."

அடித்து விட .....

ரிப்ளையில் Go To Hell!
என்று வந்தது.



                 ××××××××××××


அடுத்த ஊறுகாய் போஸ்டில் சந்திக்கும் வரை.....











அன்புடன்
#அற்பபிறவி#