About Me

My photo
இந்த உலகம் எனக்கு(ம்)தான் சொந்தம் என்று நினைச்சுட்டிருக்கிற ஒரு அற்பபிறவி.

Tuesday, May 17, 2016

மூக்குச்சாஸ்திரா...

49.who explained the uncertainty principle?
     a.Newton     b.Walter white    c.Heisenberg     d.Thomas Alva Edison

கொம்பியூட்டர் ஜீ, இப்ப நான் எத லாக் பண்றது?

புரியாம முதல்ல பிஂப்டி  பிஂப்டி ய யூஸ் பண்ணி a,d ய அப்புறப்படுத்திட்டு b ஆ இல்ல c ஆ என்டு யோச்சுட்டு,
இருக்கிற இரண்டில எதுன்னு இல்லாத மூளையை பினைஞ்சுட்டு நிமிர்ந்து பார்க்க பச்சைப்புடவை கட்டிட்டு குறுக்காவும் நெடுக்காவும் நடந்துட்டு இருந்த அந்த இருபத்தைந்து வயசு போடலாமா? ச்சீ வேண்டாம், இருபது வயது (fe)மேல்பார்வையாளர், அடுத்து இடப்பக்கம் நடந்தா b வலப்பக்கம் நடந்தா c சட்டென்று முடிவெடுத்து,
பார்த்துக்கொண்டிருக்க,
இடப்பக்கம்.
சோ b.
That's it.

நடந்த அந்த IQ எக்சாம் ரிசல்ட் பற்றி இந்த இடத்தில கதைக்க கூடாது.கதைக்கவும் முடியாது.
நிறைய எக்சாம்களில் இப்படி அடித்து விட்டிருக்கிறேன்.எறும்பு விடுவதிலும் பார்க்க இதில் ஒரு கிக் இருந்தது.எறும்பு சில வேளைகளில் ஆன்சருக்கு மேலால் போகாமல் கேள்விக்கு மேலாலயே நடந்து போய் "புள்ளிகள்" பொக்சினுள் நிற்கும்.எரிச்சல் வரும்.அடிச்சு சப்பளிக்கனும் போல இருக்கும்.
கஸ்டப்பட்டு கன்ரோல் பண்ண வேண்டும்.
ஆனால் இதென்டா பிரச்சினை இல்லை.டீச்சரே ஒரு வகைல ஆன்சரை சொல்லித்தாறது போல ஒரு பீல் வரும்.சரியோ, பிழையோ கெத்தாக கீறி விட்டு வரலாம்.
ஆனால் ஒரு விசயத்தில் மட்டும் அலேர்டாடாக இருக்க வேண்டும். இதைபண்ணும் போது சேர் மாரை செலக்ட் பண்ண கூடாது. இடப்பக்கமா? இல்லை வலப்பக்கமா? என்று பார்த்துக்கொண்டிருக்க நேர நடந்து வாற டைப் அவங்க !!.

எக்சாம் என்றாலில்லாமல் ஏகப்பட்டதுக்கு இப்படி மைன்ட் கேம் போட்டு பாத்திருக்கிறேன்.அடுத்தடுத்த பந்திகளில் விசித்திரா வருகிறாள் என்றால், அவள் தலை முடியை விரித்து விட்டிருந்தாளா?, பின்னி யிருந்தாளா?, இல்லை முழுகி விட்டு ஈரம் காய்வதற்காக தலையை துவாயால் சுத்தி கட்டியிருந்தளா? என்றதை தீர்மானிப்பது கூட சில வேளைகளில் இரண்டு ரூபா குற்றியின் தலை அல்லது பூவாய் இருக்கும்.
உண்மையை சொல்லப்போனால் வாசிக்கும் உங்களுக்கு மட்டுமில்லை எனக்கு கூட தெரியாது அது என்ன கேர் ஸ்டைல் என்று.

அடுத்த கணத்தில் நடக்க இருக்கறது அப்படியேதான் நடக்கும்.ஆனால் அதை முன்னாடியே இப்படி காசு போட்டோ, இல்லை மூக்கில் விரலை வைத்து  பார்த்தோ, அல்லது வேறு ஏதேனும் முறையிலோ தீர்மானித்து கொள்ளும் போது  ஏதோ நாமதான் கடவுள்ங்கறது போல ஒரு சந்தோசம் வரும்.

போன தடவை டூர் போயிருந்த போது நடந்தது.
இந்தக் கல்லு சரியா போய் தண்ணிக்குள்ள விழுந்தா ஆகாயா என்னைதிரும்பிப்பார்த்து சிரிப்பாங்கிறேன்.
எறிய, தட்,தட்,தட்
மூன்று தடவை பாறையில் பட்டு பளப் என்று விழுந்தது.இந்த தடவை ஆகாயத்திலிருந்து - அந்த இடத்தை கிரியேட் பண்ணிய இராவணன் சிரித்தது கூட கேட்டது.ஆகாயா மட்டும் திரும்பவில்லை.

"இதுக்கு என்னடா விளக்கம்?"

"இராவணன் வெட்டுக்குள் கிராவிட்டி ஒழுங்கா வேலை செய்யாதுடா!? காந்தப்புலம் எல்லாம் தாறுமாறா இருக்கும்.நீ எப்படி கல்லெறிஞ்சாலும் அது பாறைல பட்டுத்தான் போகும்.
ஆனாலப்பட்ட இராவணணுக்கே சீதை செட்டாகல்லை,அவன் வெட்டின கல்லு மட்டும் எப்டிடா உன் காதலுக்கு கெல்ப் பண்ணும் என்று லொஜிக்காக பேசிவிட்டு மிச்சாமாயிருந்த புழுக்கொடியலை ஸ்டைலாக தூக்கி எறிய அது எதிலும் படாமல் "சொய்ங்" என்று போய் தண்ணிக்குள் விழுந்தது."

குண்டுமணி சிரித்து விட்டு போனதைப்பார்க்க வெறுப்பாக இருந்தது.எதற்கும் இன்னோரு தடவை டிரை பண்லாம் என்று குனிந்து கல்லு தேடத்தொடங்கினேன்.

பஸ்ஸில் போகும் போது கண்ணை இறுக்கி மூடிக்கொண்டு இருந்து விட்டு ஒரு இடத்தை மனசில் நினைத்துக்கொண்டு பொசுக்கென்று கண்ணைத்திறந்து பார்க்கும் போது அந்த இடத்தை சரியாய் பஸ் கடந்தால் போகிற காரியம் சக்சஸ் என்றொரு கேம் வைந்திருந்து அதை நாளடைவில் விட வேண்டியதாயிற்று.கைதடி என்டு யோச்சுக்கொண்டு கண்ணைத்திறக்க யாழ்பாணத்துக்கு கிட்ட பஸ் வந்திட்டு.ஆனா காரியம்  ஆக வேண்டியிருந்த இடம் நாவற்குழி.

இப்படி கண்ணை மூடிக்கொண்டு இருந்திட்டு
டெஸ்டினேசனை தாண்டி போய் இறங்க கூடிய சாத்திக்கூறுகள் இருக்றதால இந்த மூக்கு சாஸ்திராவில மிக அவதானம் தேவை.
"இதை சிறுவயதினர் தனியே செல்கையில் முயற்சிசெய்து பார்க்க வேண்டாம்"

போலாமா? போகாம விடலாமா என்று குழம்பும் போதெல்லாம் கோயினை சுற்றிவிட்டு முடிவெடுத்தாலும் அது கோயின் சுற்றி வந்த முடிவில்லை, அந்த முடிவு வரும் வரைக்கும் கோயினை சுற்றிக்கொண்டு இருக்கச்சொன்ன ஆழ்மனது எடுத்த முடிவுதான் அது.... என்ற அந்த உண்மையை அடிக்கடி  நிராகரிக்க வேண்டியதாய் இருக்கும் இந்த மூ.சா வில்.

தலைக்கு ஒரு முடிவு பூவுக்கு ஒரு முடிவு என்று வைத்து சுண்டி விட்டு எதிர்பார்த்தது விழாத பட்சத்தில் அதை மாத்தி திரும்பவும் சுண்டி விட்டிருக்றேன்.யார் கேட்க போறது.மை கேம், மை ரூல்ஸ்.

எல்லாரும் அப்படி கிடையாது.சிலர் ஆட்காட்டி விரலுக்கு மூக்கில் வைத்து என்ன யோசித்தார்களோ அதுதான் கடைசி வரைக்கும்.அத மூட நம்பிக்கைன்னு சொல்லுறதான்னா? ஒரு பக்கம் வாயைச்சுளிச்சு "தெரியாது!" ன்னு தான் சொல்லணும்.காரணம்
"FATE DOESN'T CARE ABOUT YOUR PLANS"

உதாரணத்துக்கு "திருவெம்பாவையும் திரு என்பாவைக்கும்" இந்த பதிவுக்கும் இடையில ஒரு crossover event.,

வரும் போது பக்கத்துவீட்டு வாசலில் கிடந்த பூ பையை தூக்கிகொண்டு ராகீ கோயிலுக்குள் நுழைந்து
எங்கேயெல்லாம் பிரகாசம் தெரிகிறதோ அங்கேயெல்லாம் பார்க்க, மூலஸ்தானத்துக்கு பக்கத்தில் ஆண்டாளை அச்சடித்தது போல கொண்டை போட்டுக்கொண்டு  விசித்திரா நிற்க,ராகீக்கு தரிசனம் கிடைத்தது.

கையில் கிடந்த பூப்பையை பட்டு வேட்டி கட்டிக்கொண்டு பட்டையாய் திருநீறு பூசி வந்த சின்ன பொடியனை மடக்கி கூப்பிட்டு,

"இத அந்த பச்சைக்கலர் தாவணி போட்டவங்ககிட்ட கொடுத்து விடு .கேட்டா என்னை தந்தது என்டு சொல்லு"

விரிந்த பூவுக்குள் மடித்த காகிதம் தகவலை காவிச் சென்றது.

நெஞ்சைநிமிர்த்தி ஆவலாய் பார்த்துக்கொண்டு நிற்க பின்னால் வந்தவன் தோளில் கிடந்த சால்வையை தட்டி விட்டு செல்ல,ராகீ அதை எடுக்க குனிய, அந்த பையன் கொண்டு போய் பூப்பையை பக்கத்தில் நின்ற அதே பச்சைக்கலர் தாவணி போட்ட பக்கத்து வீட்டு கோதை அக்காவிடம் கொடுக்க.விசித்திராவும், அக்காவும் சேர்ந்தே போக,
முழு இடியாப்பமும் சிக்கலடித்து போய் கிடந்தது அவன் நிமிர்ந்து பார்த்த போது.

கை சொரசொரத்தது.

மூக்கில் விரலை வைத்து ஆட்காட்டி விரல் - விசித்தரா நான் எழுதினதை பார்ப்பாள்,மற்ற விரல் - பார்க்காமட்டாள் என்று முடிவு செய்து , பக்கத்தில் நின்றவனிடம்
"அண்ணே!  உங்க பேரென்ன?"
"பெருமாள்"
"நல்ல பேரு! இந்த இரண்டு விரல்ல ஒன்டைத் தொடுங்க பார்க்கலாம்"

                __________________________________









#அற்பபிறவி#