About Me

My photo
இந்த உலகம் எனக்கு(ம்)தான் சொந்தம் என்று நினைச்சுட்டிருக்கிற ஒரு அற்பபிறவி.

Sunday, July 30, 2017

Survivors

முற்குறிப்பு : 13 reasons why? மற்றும் Looking for Alaska ஐ வாசிக்காதவர்களுக்கு 100% Spoiler Alert

சந்திரமதி Vs ஹன்னா பேக்கர்

மஞ்சிமா மோகனை "அவளும் நானும்..." பாட்டில் சைடு வாக்கில் பார்க்கும் போதெல்லாம் ஏஎல்லில் படித்த சந்திரமதியின் முகம், கொழுக், மொழுக் கன்னத்தோடு ஞாபகம் வரும்.  இன்று வரை The best survivor of the world என்று யாராவது கேட்டால் கண்ணுக்குள் வந்து நிற்பது சந்திரமதிதான். குப்பி விளக்கு கொலைகளில் அத்வைதாவையும் கெமிஸ்ரியில் ஆகாயாவையும் சந்திரமதியிடமிருந்து திருடித்தான் உருவாக்ககூடியதாயிருந்தது.

13 reasons why? ஐ வாசிக்கும் போது கிட்டத்தட்ட Hannah Baker ல் சந்திரமதியின் சாயல் அடித்தது. ஆனால் கடைசி கசேட்டில் ஹன்னா சுத்தமாய் சொதப்பியது தெரிந்த பின் நோ,"சீ இஸ் நொட் ஈக்வல் டூ சந்திரமதி" என்பது புரிந்தது. -அது முழுக்க முழுக்க Jay Asher ன் தப்பு.

// Like driving along a bumpy road and losing control of the steering wheel, tossing you—just a tad—off the road. The wheels kick up some dirt, but you’re able to pull it back. Yet no matter how tightly you grip the wheel, no matter how hard you try to drive straight, something keeps jerking you to the side. You have so little control over anything anymore. And at some point, the struggle becomes too much—too tiring—and you consider letting go. Allowing tragedy…or whatever…to happen.//

என்று செய்த தப்பையும்  ஹன்னா பேக்கரையும் நியாயப்படுத்தி இருப்பார். ஆனால் இதுவே சந்திரமதியாக இருந்தால் கார் சில்லே கழன்று தனியாக ஓடினாலும் கடைசி வரை கை விட்டிருக்கமாட்டாள்.

சந்திரமதியின் வாழ்க்கையிலும் நிறைய கோர்ட்னிகளும்,மார்க்குகளும் ஏன் கிளே ஜென்சன்கள் கூட இருந்திருக்கலாம் ஆனால் 1 reason why? என்று ஒன்று இருந்திருக்காது என்று நினைக்கிறேன். கை விடுவதற்குதான் ஆயிரம் காரணம் தேவைப்படுகிறது.

தேவாரம் முடிந்து மண்டபத்திற்கு வெளியில் போகும்போது குட்டி முசோலினிகளும் குண்டு ஹிட்லர்களும் தலைவெட்டு பிழை, சூ போடவில்லை சாக்ஸ் தோய்க்கவில்லை என்று ஆண்களின் வரிசைக்குள் ஊடுருவி வெளியில் பிடித்து விடும்போது பெண்கள் வரிசைக்குள் அடிக்கடி தெரிவு செய்யப்பட்டு வெளியில் நிற்கின்ற ஒரு ஆளாக  ஒன்பதாம் ஆண்டிலிருந்து சந்திரமதியை அவதானித்திருக்கிறேன். அது பெரும்பாலும் நகத்திற்கு நெயில் பாலிஷ் போட்டதற்காகவோ, காதில் ஜிமிக்கி போட்டதற்காகவோ, சீருடை முழங்காலுக்கு கீழ் இல்லாததற்காகவோ, இடுப்பு பட்டியை இறுக்கி தைத்ததற்காயோ இருக்கலாம். ஆனால் இது எதுவும் இல்லாமல் சந்திரமதியை கற்பனை செய்து பார்க்க முடியவில்லை.

ஏ எல்லின் கடைசிக்காலங்களில் தனக்கான அரி.சந்திரனையும் தேடிக்கண்டு பிடித்திருந்தாள்.சந்திரமதியே சந்திரனை தேடிப்போய் புறப்போஸ் பண்ணியதாய் பேசிக்கொணாடார்கள், அதுவும் எட்டடி தூரத்தில் போய்கொண்டிருந்தவனை கூப்பிட்டு சந்திரன் "ஜ லவ் யூ" என்று இரண்டு ஏக்கர் ஸ்கூலுக்கும் கேட்க கூடினாற் போல் கத்தி புறப்போஸ் பண்ணியாதாய் சொன்னார்கள்.

என்ன ஒரே ஒரு வித்தியாசம் நிறைய விஸ்வாமித்திரர்கள் அரி.சந்திரனை விட்டு விட்டு சந்திரமதியை பொய் சொல்ல வைக்கிறேன் பார் என கங்கணம் கட்டிக்கொண்டு திரிந்தார்கள். கடைசி காலம் வரை அவர்களால் ஒரு விரலின் நெயில் பாலிசைக் கூட அழிக்க முடியவில்லை.

ஏஎல் முடிந்து வெளியில் வந்து சிறிது காலத்தில் சந்திரன் கழன்று போய் விட்டதாய் கேள்விப்பட்டேன். வாழ்க்கை நிறையவே சந்திரமதியை அடித்து போடுவதாய் பட்டது.

சேர்வைவிங் என்பது ஒரு மந்திரம்,
அதிகாலையில் எழுந்து இடுப்பளவு தண்ணீரில் நின்று சூரியஉதயம் வரை சொல்லிபழகிக்கொள்ளத் தேவையில்லாத ஒரு மந்திரம்.எல்லாரும் அதை பழகிக்கொண்டால் சமநிலை குழம்பிவிடும்.டார்வினின் சேர்வைவல் ஒவ் தி பிட்டஸ்டில் ஏதோ ஒரு வகையில் எல்லாருமே சேர்வைவர்கள்தான், ஆனால் ஒரு கட்டத்தில் உடைந்து போய் விடும் போது ஹன்னா பேக்கரையும் அதையும் தாண்டி எழுந்து போகும் போது சந்திரமதியையும் பார்க்கலாம்.

அதன் பின் இந்த பதிவின் முடிவு வரை கிட்டத்தட்ட ஒரு மூன்று வருடத்திற்கு சந்திரமதி தொலைந்து போய் விட்டாள்.

ஹன்னா பேக்கர் Vs அலஸ்கா

இரண்டுமே பிக்சன்.இரண்டு பேருமே கடைசியில் ஏகப்பட்ட பிரச்சினைகளோடு இறந்து போய் விடுகிறார்கள். ஆனால் ஹன்னாவா? அலஸ்காவா? பெஸ்ட் என்று கேட்டால் அலஸ்காதான். காரணம் அது John Green ன் கதை. Looking For Alaska, Paper Towns ,Abundances Of Katherines என்று கிறீனின் ஒவ்வொரு கதையிலும் அலஸ்கா ரகத்திலுள்ள ஒரு வியார்ட் கரக்டர் இருக்கும்.

அலஸ்கா ஒரு சேர்வைவரா இல்லை லூஸரா என்று கேட்டால் அது ஆளாளுக்கேற்ப மாறுபடும். நீங்கள் ஹன்னா பேக்கரின் விசிறியா அப்படியென்றால் அலஸ்காவை நிச்சயமாய் லூஸருக்குள் சேர்த்து விடுவீர்கள். சந்திரமதியின் விசிறியென்றால் மாறி சொல்வீர்கள்.காரணம் அலஸ்காவின் மரணம் ஒரு மிஸ்டரி."The truth is what you believe"
அது விபத்தா அல்லது தற்கொலையா என்பது வாசகர்களின் முடிவுக்கு விட்டு கடைசியில்,

"Sorry Readers!
I KILLED HER"

என்று எழுதுகின்ற ஒரு Writer- John Green.

"YOU ALL SMOKE TO ENJOY IT
I SMOKE TO DIE "

என்று ஒரு இடத்தில் அலஸ்கா சொல்லும் போது ஹன்னாவின் விசிறிகள் எல்லாம் புத்தகத்தை மூடிவைத்துவிட்டு எழுந்து நின்று விசிலடித்து see, she killed herself, it's a suicide என்பார்கள்.

ஆனால் இன்னுமோர் இடத்தில் "Luck is for Losers " என்று அலஸ்காவே சொல்லியியிருக்கும். சாவைப்பற்றி நிறைய இடத்தில் அலஸ்கா கதைத்திருந்தாலும் எந்த இடத்திலும் தான் ஒரு லூஸர் என்பதை ஏற்றுக்கொள்ளாததால், she is a beautiful and mystery survivor என்று சொல்லி ஒரு சந்திரமதியின் விசிறியாக நான் எழுந்துநின்று கூவடிப்பேன்.

அலஸ்காவைப்பற்றியும் ஜோன் கிறீன் பற்றியும் எழுதுவதற்கு இன்னும் நிறைய இருப்பதால் இப்போதைக்கு இந்த இடத்தில் டொட் போட்டு முடிவுரைக்கு வரலாம்.

சந்திரமதியைப்போல் நிறைய சேர்வைவர்களையும், லூஸர்ஸையும் நிஜ வாழ்க்கையில்("இருவரில்" வருகின்ற நாகம்மா மற்றும் ஆனந்தனண்ணை கூட இந்த கேட்டகரிக்குள்தான்) சந்திக்க நேரிடும்.

ஹன்னாவிற்கு எப்படி ஒரே ஒரு சந்தர்ப்பத்தில் மட்டும் கிளேயோடு கதைக்க சந்தர்ப்பம் கிடைத்ததோ அதே போல எனக்கும் சந்திரமதியோடு கிடைத்த ஒரு சந்தர்ப்பத்தில் கேட்ட ஒரே ஒரு கேள்வி..

"உனக்கு இந்த பெயர் வைக்க காரணம் என்ன?"
" அப்பா, அம்மாக்கிட்ட நிறைய பொய் சொல்லுவார்"
________________

சந்திரமதி தொலைந்து மூன்று வருடங்களுக்கு பிறகு...

இரண்டு நாட்களுக்கு முதல் Kfc ல் மெனுக்கார்ட்டை பார்த்து ஓர்டர் பண்ணும் போது செத்த கோழியெல்லாம் ஆவியாய் திரிந்தால் என்றொரு  கற்பனையோடு சமையல் பகுதிக்குள் பார்த்த போது "அவளும் நானும்" மஞ்சிமா மோகன் வெள்ளைத்தொப்பி, வெள்ளை ஏப்ரனோடு சிக்கனை பார்பிக்யூவில் புரட்டுவது தெரிந்தது.

கொழுக்,மொழுக் கன்னம் வத்திப்போயிருந்தது.
அதே ஜிமிக்கி
அதே பார்வை
அதே நெயில் பாலிஷ்
அதே இடுப்பை ஒட்டிய சட்டை
அதே சந்திரமதி...






#அற்பபிறவி#