About Me

My photo
இந்த உலகம் எனக்கு(ம்)தான் சொந்தம் என்று நினைச்சுட்டிருக்கிற ஒரு அற்பபிறவி.

Tuesday, January 5, 2016

அண்ணரும் அப்பளமும்

அண்ணரின் அலப்பறைகள் 03:சோக்காட்டுதல் பார்ட்

இந்தப்பதிவில் வரும் விலங்குகள் சில...
நாய்,எருமை,பூனை,நான்,அண்ணர்

சோக்....கா....ட்......டு............த..............ல்

டைட்டிலை  இப்படி இழுத்துப் போட்டதற்கான காரணமே இது டைமிங்கில் தங்குகின்ற ஒரு விடயம்.

நிறைய நாள் அண்ணரின் அலப்பறைகள் தொடரை தொட்டு...நேற்று அவரே கேட்டாரு என் அலப்பறைக்கு என்னாச்சு ஒரேஞ் கலரு ரிவென்ஞ் எங்கடா ன்னு அது வரும் அது வரும்...
அதுக்கிடைல நிறைய வரும் பாரு நீ என்டன் .
கட் பண்ணிட்டான் கட்டை கொடுத்து அடி வாங்கிட்டமோன்னு...

அண்ணரும் நானும் சொத்துக்கு பிரச்சினை பண்ணிணதிலும் பார்க்க கொத்துக்கு நிறைய பிரச்சினை பண்ணியிருக்கம்.
அண்ணருக்கும் எனக்கும் ஏதோ காணிப்பிரச்சினை வந்திருக்கும் என்டு ரீங்க நினைச்சா அது உங்க தப்பு.உண்மைல வீணிப்பிரச்சினைதான் நிறைய வந்திருக்கு.

எள்ளென்டா எட்டாப்பிரிச்சு கொடுப்பான் என்டு ஒரு ப. மொ இருக்கு.ஆனா நான் எள்ளென்ன எள்ளுத் தோலைக் கூட அண்ணருக்கு அப்படி கொடுக்க மாட்டன்.இவ்வளத்துக்கும் அவர் பெரிய திறமோ என்டு கேட்டா அதான் இல்லை.
வீட்டுக்குள்ள
நான் வைக்கோல் பட்டறை நாய் என்டா
அவர் வைக்கோல் பட்டறை எருமை மாடு
நாயோ எருமையோ பெரிசு ....???

அண்ணரோட சாப்பாட்டுக்கு மட்டுமில்லை,சாப்பாட்டுக்கிண்ணிக்கூட அடிபட்டிருக்கன்.அது உண்மைல ஐஞ்சு வயசில தொடங்கின ஒரு பிரச்சினை.

ம்,நான் ஒரு மூணு வயசு மட்டும் பேபி புரடக்ஸ்ஸோட சூப்பி போத்தல் பாவனையாளர்.அதென்னவோ தெரியாது பேணில தண்ணி குடிச்சா வாய்க்குள்ள போறதிலும் பாரக்க கடவாய்யால வெளில நிறைய போய்டும் நாலு வயசில நைஸாய் பேணில குடிக்க பழகி அஞ்சு வயசில அண்ணாந்து குடிக்க பழகிட்டன்.
ஆனா அண்ணர் அதிலயும் பார்ஸ்ட் இரண்டு வயசிலயே பேணில குடிச்சவராம் என்டு எப்பவும் பீத்திக்கொள்ளுவர்.நான் கண்டு கொள்ளுரேல்ல.ஒரு நாள் அம்மா இதன்டா உவன் முதல் முதல் தண்ணி குடிச்ச பேணி என்டு தூக்கி காட்டினா...பெருமையா.
அப்பதான் வடிவா கவனிச்சன்.
யாழ்பாணத்தாரின்ர அரியதொரு கண்டுபிடிப்பது
ஒரு மூக்குப்பேணி.

பத்தி கொண்டு வந்திச்சு பம்மாத்திப்போட்டானே என்டு.மூக்குபேணியை கொண்டே அவற்ற மூக்கு மேலயே விட்டெறியோனும் போல கிடந்தது.ஆனா நான் அப்படி செய்யேல்ல.. கடுப்பில கொஞ்சம் வித்தியாசமா டிரை பண்ணிணன் அவர் சோத்துக்கோப்பையோட வந்து சோத்து மயக்கத்தில கதிரைல இருக்க பின்னால ஒரு கொஞ்சம் உன்னான ஒரு கொஞ்சம்தான் இழுத்தனான்.அது நாசம் அண்ணர் தொபுக்கடீர் என்டு நிலத்தில விழுந்தார்.கோப்பைல கிடந்த சோறொல்லாம் தெறிச்சு மேல போய் கீழ வந்து சோறு மழை பெய்தது.

அந்த டைம்ல பாடி வேற தொலைச்சு விட்டன் ஒரு ஆவேசத்தில
தொப்பொன்டு விழுந்தார் தொப்பி கழன்டார் என்டு..
என்ன செய்யறது என்டு தெரியேல்ல அண்ணருக்கு,அப்படியே கொஞ்ச நேரம் சோத்துக்கோலத்துக்கு நடுவில இருந்தார்.நான் இடுப்பெலும்பு உடைஞ்சுதும் தெரியா என்டு ஒருக்கா பயந்திட்டன்.
திடீர் பாய்சலாய் எழும்பி வெறி ப்பிடிச்சாப்போல திலத்த தொடங்கிட்டார்.இனி வழமையான சீன்தான் அவர் என்னை டாம் போல திலத்திறதிலயும் நான் அவரை முந்திகொண்டு ஜெர்ரி மாதிரி ஓடறதும்.

இருந்தாலும் அதுக்குப்பிறகு நடந்த அந்த சம்பவம்தான் இத்தனைக்கும் இந்தக்கதைக்கும் காரணம்.
வரலாற்றையே புரட்டிப்போட்ட சம்பவம் அது.
திலத்திட்டு வந்த அண்ணர் பாதில நின்டு திரும்பி ஓடினார்.
வலிச்சு வலிச்சு ஓடின எனக்கே ஒருமாதரியாயிட்டு.என்ன கருமம் என்டு திரும்பி பதுங்கி பதுங்கி நடந்தன்.அண்ணர் அந்ந டைம்ல கொரில்லா தாக்குதல்ல புகழ் பெற்ற ஒரு ஆள்.எக்ஸோரா இல்லாட்டி குறோட்டனுகளுக்குள்ள உப்புடி பதுங்கி நின்டு என்னை பல முறை தாக்கியருக்கார்.கவனமாத்தான் நடந்தன்,இருந்தாலும் அப்படி ஏதுமே நடக்கல்ல.
வீட்டுக்குள்ள போய் பார்த்தா அண்ணர் சோறு சாப்பிட்றார்.அதுவும் கத்தரிக்காய் பொரியலோட.நான் உடன நிலத்தை பாத்தன்.கீழ கொட்டுப்பட்ட சோறு அப்படியே கிடக்குது
அப்ப,அப்ப உது என்ர சோறு....

அன்டைக்கு அண்ணர் எனக்கு முதல் முதலா சோக்காட்டினார்.
சோத்தை வாரி ச்சீ சேத்தை வாரி அடிச்சப்போல கிடந்துது மூஞ்சில.

அன்டைல இருந்து
மானத்துக்கும் அவமானத்துக்கும் இடையிலான ஒரு மரண போராட்டமா இந்த
சோக்காட்டுதல் வந்தது வீட்டில.

வீட்டை இருந்து வந்த எழுதப்படாத சட்டத்தை பற்றி போன பதிவில எழுதினதா ஞாபகம்.காயோ,பழமோ ஆர் முதல்ல கைப்பற்றினமோ அவையளுக்குத்தான் தோல் கூட.சரி பாதி சமத்துவத்துக்கு சான்சே இல்லை.

இது ஊருக்கே தெரியும்,வீட்டை ஏதாவது சாப்பாட்டு சாமன் அனுப்புறதென்டா அவையளே பாக பிரிவினை செய்து இரண்டு டிஸ்ஸில போட்டுத்தான் வீட்ட வரும்.ஒரு ஆள் மட்டும் நின்டா எந்த வஞ்சகமுமே இல்லாம இரண்டு டிஷ்ஷையும் ஒன்னாக்கிட்டு சாப்பிட்டறது.இரண்டு பேரும் நின்டா
அங்கதான் ஆட்டம் ஆரம்பம்.
வலு மெதுவா,வலு வலு மெதுவா சாப்பிடணும்.ஆசைல அவாக் அவாக் என்டு சாப்பிட்டு முடிச்சா... அவர்ர வாயை நானோ இல்லை என்ர வாயை அவரோ பாத்துக்கொண்டிருக்கோனும்.
அந்த நேரம் பாத்து பொச்சடிச்சு நாக்கில எச்சில் ஊற வைக்கறமாதிரி சாப்பிடுவன்/வர் பாருங்கோ அதான் சோக்காட்டுதல்.
இதில வெல்லுறதுக்கு ஆளாளுக்கு இரண்டு மூன்டு டெக்னிக்கை பொலோ பண்ணிணம்.
கொண்டு வாறதிலை கொஞ்சத்தை தூக்கி முதலே ஒளிச்சு வைக்கிறது.
சாப்பிட்றாப் போல பவ்லா காட்டிட்டு சாப்பிடமா இருக்கிறது.
இதெல்லாத்துக்கும் மேலால கடைசி வாயை தின்னுட்டு விழுங்காம வாய்க்குள்ளயே வைச்சிருக்கற வரைக்கும் அட்டூழியம் பண்ணியிருக்கன்/கார்.

இப்படி இருந்த காலத்தில அண்ணருக்கு சாதகமா காத்து வீசின ஒரு காலம் அவர் ஏஎல் எழுதிட்டு இருந்த காலம்.நான் பள்ளிக்கூடம் முடிஞ்சு வந்து சோத்தைப்போட்டு கறியைப் பாத்தா சட்டி கழுவனுமா என்டு சந்தேகம் வாறது  போல கிளீனா இருக்கும், பொரியல் இருந்ததுக்கு அடையாளமாய் சின்ன துண்டு அப்பளம் இருக்கும்.நான் நல்லாவே நொந்து போன காலம் அது.

இரண்டு நாள் பொறுத்துப்பார்த்தன்
மூண்டு நாள்
அண்ணர் திருந்தேல்ல.
ஆனா கதிரையை வலு அலேட்டா இழுத்து விட்டு தின்டு கொண்டிருந்தார் தினமும்.

பொறுத்து,பொறுத்து
பார்த்து ஐஞ்சாம் நாள் காலைலயே பொரிச்சு வைச்ச அப்பளம் அவ்வளத்தையும் பேப்பர்ல சுருட்டி அலமாரிக்குள் இரண்டாவது தட்டில மூணாவது வாளிக்கு பின்னால ஒளிச்சு வைச்சுட்டு போனன்.

மத்தியானம் வீட்ட வர அண்ணர் கோப்பையும் கோபமுமா நிக்கிறார்.
வலு குஷியா போய் முகம் கழுவி,உடுப்பு மாத்தி கோப்பையை எடுத்து சோத்தை போட்டுட்டு

ஒரு வெற்றிச்சிரிப்பு,ஒரு எகத்தாள சிரிப்போட
நான் குனிஞ்சன்.
அண்ணரும் குனிஞ்சார்.
இரண்டாவது தட்டில மூணாவது வாளிக்கு பின்னால கைய விட்டா....
அப்பளத்தை காணேல்ல.
ஆண்டவா அப்பளத்தை காணேல்ல.

அங்கால
கொஞ்சம் தள்ளி மூலைக்குள்ள
நாலு காலையும் மடக்கிட்டு
இரண்டு கண்ணையும் மூடிட்டு
கறக்,மொறக், என்று பொச்சடித்து
சோக்காட்டி தின்டு கொண்டிருந்தது.
அந்த அற்(புத)ப ஜீவன்.

            *******






கதைக்கு ஒரு பிற்குறிப்பு
கரண்ட் டைம்ல
இப்போ வீட்ல அண்ணர் இல்லாததால நானே ராசா,நானே மந்திரி,ஆனாலும் சோக்காட்டுறதை வைபர்,மெசென்ஜருக்குள்ளால போட்டோ போட்டு தொடர்ந்தாலும் அந்த நேர்ல காட்டி தின்றது போல பீல் வருதில்ல.சுருக்கமா சொன்னா அந்த கத்தரிக்கா பொரியல் கூட லைட்டா கைக்குது.
அண்டைக்கு ஐஸ்கிறீம் குடிக்கிறன் என்டு மூக்கில கிறீமோட செல்பி அனுப்பினார். நான் அப்பத்தை தூக்கி கையில வைச்சு கொண்டு  மூஞ்சை முழுக்க பாலை அப்பிட்டு அப்பம் நக்கின மூஞ்சியோட ஒரு செல்பியை அடிச்சு விட்டன் பதிலுக்கு.

அண்ணரின் அலப்பறைகள் தொடரும்.....

No comments:

Post a Comment