About Me

My photo
இந்த உலகம் எனக்கு(ம்)தான் சொந்தம் என்று நினைச்சுட்டிருக்கிற ஒரு அற்பபிறவி.

Thursday, February 5, 2015

காதல் இல்லாமல்......


எனக்கு இதை தவிர வேற வழி தெரியேல்ல .
எத்தினை நாள் தான் நானும் சாடை மாடையாய் சொல்றதும் அவளும் கண்டுக்காம இருக்கிறதும்.

இது மூலமா எப்டியாச்சும் சொல்லிட வேண்டியதுதான்.
'உ' போட்டு
தொடங்கினேன்.


உலகம் அப்படியே அதே நீள் வட்டப்பாதையில் இருபத்து நான்கு மணி நேரமும் சுற்றிக்கொண்டிருந்தாலும் இந்த 2165 ஆம் ஆண்டில் ஜீரோனுக்கு அது பிடிக்கவில்லை.


வேகமாய் சுற்ற வேண்டும் போல கிடந்தது.
அப்படி சுற்றினால்தான்  வேகமாய் விடிந்து மீண்டும் வகுப்புக்கு போய் ஆலியாவை பார்க்க முடியும்.

ஆலியா.அழகு. இப்போதைக்கு இப்படித்தான் அவனால் கூற முடியும்.

இதற்கெல்லாம்
காரணம் சற்று கிழமைகளுக்கு முன்


யாருக்கும் இல்லாத பிரச்சினை.

வகுப்பில் படிக்கும் போது அது பெரிசாய் தெரிவதில்லை.வீட்டில் இருக்கும் போதுதான் மீண்டும் வகுப்புக்கு போக வேண்டும் போல.

யோசித்தான்.நேற்று அதுக்கு முதல் நாள் வித்தியாசமாய் தின்றது குடித்தது.என்ன செய்தேன்.

ப்ளாஷ் அடித்தது. சட்டென்று ஞாபகம் வந்தது.கம்பியூட்டரில் கை வைத்து தப்பாட்டம் ஆடியது.

அசைன்மென்டுக்கு பக்றீரியா தேட இறங்கி எங்கோ ஏதோ எப்படியோ போய் சிக்கியது
.ஏதோ போயம் போல
வாசித்தது

முதலில் வாசிக்கும் போது அவனுக்கு அது பிடிபடவில்லை.

"காதலித்துப்பார் உன்னைச்சுற்றி ஒரு ஒளிவட்டம் தெரியும்"

காதல்.????

இந்தக்கணம் பொறி தட்ட மீண்டும் பழைய கிஸ்டரியை நோண்டி அதே பக்கத்தை எடுத்து வாசிக்க வரிக்கு வரி அவனுக்கு இப்ப உள்ள பிரச்சினைகள் அதிலே  விலாவாரியாய்.

"வயிற்றுக்கும் தொண்டைக்கும் உருவமில்லா உருண்டை உருளக்காண்பாய்"

எக்ஸாட்லி !!!!
எனக்கு வந்திருக்கிறது ஒரு வருத்தம்தான்.
காதல்.என்ன கருமம் இது.

உடனடியாய் பிரிஸ்கிரிப்ஷன் தேவை.ஒரு அழைப்பில் அந்த ஸ்டேசன் மருத்துவர் வீட்டில் இருந்தார்.இந்த நூற்றாண்டின் விதி.அது.

நெற்றியில் கொஞ்சம் நரை தலைமயிர்.கையில் பெட்டி கோட்டை கழட்டி மேசையில் வைத்து.அறுபது தாண்டியிருக்கும்.

என்ன?

வருத்தம்?

என்ன செய்யுது?

மூன்று முறை குளித்து ஆறு தரம் பல் துலக்குகின்றேன்!!

அப்டி என்டா வருத்தம் ஒன்டும் வரக்கூடாதே.!!

"அதான் டாக்டர் பிரச்சினை.எனக்கு வந்திருக்கிறது காதல் வருத்தமாம் அப்டியே இதெல்லாம் அதில போட்டிருக்கு"

எதில.
சொல்ல முடியாது. தடை செய்த பக்கங்களை கிண்டியது. சைபர் கிரைம்.நாக்கைக்கடித்தான்.

டொக்டர் காவி தெரிய சிரித்தார்.
காதல்.
இதை நீ எங்க கேள்விப்பட்டாய் அது ஒரு எண்பது தொண்ணூறு வருசங்களுக்கு முந்திய அழிஞ்சு போன ஒரு கொடுமை.

கிட்டத்தட்ட 2067 ம் ஆண்டளவில இந்த உலகத்தில இருந்த கடைசிப்பெண் போனதோட அந்த காதலும் மெல்ல மறைஞ்சுட்டுது.தொடர்ந்து விஞ்ஞானத்தால பெண்ணிணத்தை உருவாக்க மட்டும்தான் முடிஞ்சுதே ஒழிய அவங்களோட வயிற்றில

"அதெல்லாம் வேண்டாம் விடு"

"இல்ல டொக் சொல்லுங்க"

இப்ப குழந்தைகளை வோம்ப் ஸ்டேசன்ல இருந்து வாங்கிற மாதிரி நூறு வருசங்களுக்கு முன்னாடி இல்ல.வயிற்றிலதான் கரு வளர்ந்தது. குழந்தை பிறந்தது பெண்களுக்கு.
உண்மையான  மனிதப்பெண்கள் போனதோட இந்த காதலும் போயிட்டுது.இப்படியான உணர்வுகளும் போயிட்டுது.

இப்ப இருக்கிறதெல்லாம் உணர்வுகள் எதுவுமே இல்லாத  காதோரங்களுக்கு கொஞ்சம் தள்ளி கறுப்பு குறியுள்ள பெண் உடல்கள் மட்டும்தான்.

கொம்பியூட்டர்ல ரெஸ்ரிக் பண்ணிய பக்கங்களை நோண்டாம இருந்தாலே போதும்.உனக்கு இந்த வருத்தம் எல்லாம் வராது.இதெல்லாம் ஒரு பிரமை.

ஏன் என்டா இப்ப உன்னால யாரையும் காதலிக்க முடியாது.உன்னையும் யாருமே காதலிக்க மாட்டார்கள்.
அதால தான் இந்த உலகம் இப்ப இவ்வளவு அமைதியாய் இருக்குது.

இருந்தாலும் ஏதோ யோசித்து புறப்படுகையில் அவனிடமிருந்து ஐந்து மி.லீ ரத்தத்தை உறிஞ்சிக்கொண்டார்.

இது நடந்து சற்றுக்கிழமைகளின் பின் இப்போது.
வகுப்பில்.

ஆலியாவை அடிக்கடி திரும்பி பார்த்தான்.

ஒரு கையை கழுத்துக்குள் வைத்துக்கொண்டு

ஏதோ அவளும் அவனைப்பார்ப்பது போல கிடந்தது.
ஆனால் அப்படி இல்லை அதுவும் ஒரு அறிகுறி என்று சில கவிக்கிறுக்கல்களிலிருந்து கண்டுபிடித்தான்.

பல பழைய விடயங்களைக்கிண்டி கிளறியதில்

நிறைய புலப்பட்டது.

ஷாஜகான் தொடங்கி ஜீலியட் வரை வாசித்து
ஏ.ஆர் முதல் இளையராஜா வரை ஐ போட்டில் நிரப்பி

கவிப்பேரரசுக்குப் போட்டியாய் இப்போது யோசித்துக்கொண்டிருந்தான்.

ஆலியாவை ஆரம்பத்தில் 'அழகு' என்று மட்டும் கூறிய அவன் அந்த அழகை வர்ணிக்க கூடியனாகி.....

இந்தக்காதல் கதைக்கு வில்லன் அவனோட காதல் என்றால் என்ன என்று தெரியாத காதலிதான். இருந்தாலும் இன்னும் ஒரு வில்லனை செருகலாமா என்டு மண்டை நான் மண்டை காய

அது என் திட்டத்துக்கு பாதகமாய் போயிடலாம்.இருந்தாலும்

ஜீரோ வுக்கு அந்த வருத்தம் வந்து இரண்டு மாதம் ஆகி விட்டிருந்தது.

ஆலியா என்னும் பேர் அணு அணுவாக இப்போது உடலில் ஊறிப்போயிருந்தது.
யாரிடமும் சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல்

என்ன உலகமடா இது??
இதெல்லாம் நடப்பதற்கு முன் அவளுக்கு பக்கத்தில் நின்றிருக்கின்றான்.
கதைத்திருக்கின்றான்.
தொட்டுப்பார்த்திருக்கின்றான்.

இப்போது எட்டடி தள்ளி நின்றான்.

இதுக்கு மேலே தாங்க முடியாது.

சொல்லித்தோற்ற காதல்களிலும் சொல்லாமல் தோற்ற காதல்கள் அதிகம் என்று
எங்கோ வாசித்தது ஞாபகம் வந்தது.

சொல்லி விடுவது என்று ஒரு முடிவுக்கு வந்தான். எப்படி??
கையாலேயே கடிதம் எழுத முடிவெடுத்திருந்தான்.

கடைசியாக களவாய் பார்த்த அத்தனை காதல் படங்களையும் மைன்டுக்குள் சுத்தவிட்டு

ஆலியா.ஆலியா.


கடிதம் மூலமா எப்டியாச்சும் சொல்லிட வேண்டியதுதான்.
எழுத
தொடங்கினான்

எல்லாவற்றையையும் விவரமாய
எழுதி முடித்து பார்த்தான்.

பச்சை இலையே  இல்லை சிங்கிள் சிவப்பு ரோசாவுக்கு எங்கே போவான்.
அதனால் வெறும் கவருக்குள் செருகினான்

நானும் செருகினேன்.

ஆபிஸுக்குள் நுழைந்து தேடிப்பிடித்து.

அதிசயா! அதீ

டோன்ட் கோல் மீ .

வை.??

நீ முதல்ல கையில இருக்கிறத அதில வை.நேற்று எங்க போனா?


அய்யோ இண்டைக்கும் முட்டி மோதப்போறாள்!!பட்டென்டு போட்டு உடைக்கனும்.

ஐ . அடச்சீ கருமம் தொண்டை எல்லாம் வறண்டு போய்.எச்சிலை விழுங்கி சட்டென்று சொன்னேன்.

"ஐ லவ் யூ"

"அதிச(யா)யம் அதிசயமாய் பார்த்து."

என்ன நீ? கொஞ்சம் கூட விவஸ்தையே கிடையாதா உனக்கு?

"கொஞ்சம் பொறு நான் இன்னும் முடிக்கேல்ல"

இந்தா.. ஆலியாவிடம் ஜீரோன் கவரை நீட்டினான்.

இதைத்தான் கருமம் லெட்டரா வேற கொண்டந்தியா.கொடுப்புக்குள் சிரிப்பதை கன்னக்குழி காட்டியது.அவள் அதை காட்டாமல் நெற்றி முடியை ஒற்றை விரலால் இழுத்து விட்டுக்கொண்டு மறைத்தாள்.

"எல்லாக்காதலிகளும் கை தேர்ந்த கள்ளிகள்"

இங்க கொண்டா!

"இது லெட்டரில்ல."

"அப்போ"

"அடுத்த கிழமைக்கு லவ்ர்ஸ் டேக்காக ஸ்பெஷலாய் பப்ளிஷ் பண்ண நீ கேட்ட கதை. ஆனா?"

என்ன?

இதோட முடிவு நான் எழுதல்ல. நீ என்னை லவ் பண்றதா இருந்தா இந்த கதைல இருக்கிற காதல் எப்படியாவது ஜெயிக்கிற மாதிரி எழுதிட்டு பிரிண்டுக்கு குடு .இல்லாட்டி அதில வாற டொக்டரை வில்லனாக்கி இரண்டு பேரையும் பிரிச்சுடு.முடிவு உன்னோடது.

அதை அறிய 14 வரை காத்திருக்கிறன்.இப்ப எதுவும் சொல்லாதே.

இந்தா....நான் அதிசயாவிடம் கவரை நீட்டினேன்.

இரண்டு கவர்களும் ஒரே நேரத்தில் கீழே விழுந்தது.

அதை குனிந்து எடுக்கும் போது
ஜீரோன் பார்த்தான்

 காதோரங்களுக்கு பக்கத்தில்
கறுப்பு குறி எதையும் காணவில்லை.

அப்படியானால்.இவள்!

          #####














இந்த காதலர் தினத்துக்கு
இந்தக்கதை என்
சமர்பணங்கள்.

அற்பப்பிறவி



6 comments:

  1. ஆலியா அவ்ளோ அழகா தான் இருந்திருக்கணும், ஏன்னா அவங்க காதல் அவ்ளோ அழகு!!!. அவங்க காதலை வாசித்த பிறகு நான் பாக்கிறது எல்லாமே அவ்ளோ அழகா தெரிகிறதே என் கண்களுக்கு.
    A nice one budd. (smile)

    ReplyDelete
  2. Feel feel feel appidi oru feel like sujatha!
    Hats off bro

    ReplyDelete
  3. நன்றிகள் பல நண்பர்களே!!!

    ReplyDelete
  4. This comment has been removed by the author.

    ReplyDelete