About Me

My photo
இந்த உலகம் எனக்கு(ம்)தான் சொந்தம் என்று நினைச்சுட்டிருக்கிற ஒரு அற்பபிறவி.

Sunday, June 12, 2016

ஒரு பட்டாம்பூச்சியின் பள்ளிக்கால டயரிக்குறிப்புக்கள் -01

இப்படி எல்லாம் நடந்தே இருக்காது.உவன் நல்லா சரடு விட்டு வெடிக்கறான் என்று வாசிக்கும் போது நினைக்கபோகின்ற பக்கங்கள்.
ஆனால் 95 பேர்சன்டேஜ் கதையும் நிஜமான உண்மை எரியாத கற்பூரம் மேல் சத்தியம்.மீதி 5   க்கும் ஆங்காங்கே சாண்டில்யன் கதை யவனராணிக்களும் மஞ்சுக்களும் உலாவுவார்கள்.கண்டு கொள்ளாதீர்கள்.
இது  பகிரங்கமான திகதி இல்லாத டயரி.
என்ன இந்த டயரியில் சிறப்பென்றால் முடிந்து போன காலத்தில் இது இருக்காது,முழுக்க முழுக்க நிகழ்காலத்தில்  ஓடும்,எப்போதும் ஓடிக்கொண்டே இருக்கும்.
மற்றவர்கள் டயரியை வாசிப்பதில்லை என்ற கொள்கையில் நீங்கள் இருந்தால் மூடி விடவும்.நல்ல பழக்கம் அது.இல்லை என்ன எழுதியிருக்கு என்று தட்டிப்பார்க்கலாம் என்றால் அதுவும் பிரச்சினை இல்லை.தொடர்ந்து வாசிக்கலாம்..
                           #######
முதல் நாள் அப்படியே படிகளை ஒண்டு ஒண்டா தாண்டி மேல் மாடிக்கு வந்து
1 வது இல்ல
2 வது இல்ல
3 வது இதுதான்
இதுதான் நம்ம வகுப்பு என்று பார்க்கும் போது முட்டையோடு உடைந்து புது உலகத்துக்குள் பிரேசித்த உணர்வு.இன்னும் 2 வருடங்களுக்கு சொர்க்கம் இங்கே தற்காலிக இடமாற்றம்.
பார்த்த உடனயே பரவசப்படக்காரணமிருந்தது.கலவன் பாடசாலை என்று பெயர் தான் ஒழிய உவங்கள் எங்களை கலந்து விடுறது என்னவோ ஏ.எல்லுக்கு வந்தாப்பிறகுதான்.
அறுத்து விட வேண்டிய வயசில அவுட்டு விட்டறதால ஜாலி நமக்குத்தானே!

ஏ.எல்லுக்கு கீழ கூட்டும்முறை என்ட சிஸ்டத்தில பாதிக்கப்பட்ட  கோடிகளுக்குள்ள நானும் ஒருவன்.
இப்ப பார்த்து பரவசப்பட்டது.

வகுப்புக்குள்ள 5 பேர் like  பஞ்ச பாண்டவர் போல.
அட வகுப்பு கூட்ராங்கப்பா மனசுக்குள்ள ஒரு புளுகு .இவளுங்க இனி டெய்லி கூட்டுவாளவ நமக்கு இனி ஜாலி தான் போ
என்றப்போ

ஒவ்வொருத்தனா வந்தாங்க
டேய் .,
மச்சி,
அவன் இவன் தெரிஞ்சவன் தெரியாதவனு
மொத்தம் 21 பேரைக்கொண்ட,அந்த வகுப்பு
THE M2
ஜனனமாகியது இந்த முற்றுபுள்ளியில் தான்.
அது தொடரபோகிறது.....

ஒவ்வொருத்தனும் ஒவ்வொரு கனவுகளோடு தான் இங்கே நுழைகிறான்
சிலர் கனவுகள் இங்கேயே புதைக்கபடும் சிலர் கனவுகள் நிஐங்களாகி நினைக்கப்பட்டும் .....

இப்டி கவித்துவமா சொல்லா விட்டாலும் கண்றாவியாக  இந்த இரண்டு வரியைதான் இண்டைக்கு பாடமா வச்சு எடுப்பாங்கள் என்ற அந்த எதிர்பார்ப்பில் ஒன்றரைப்பிடி மண் எடுத்து வந்து கொட்டிய முதல் பெருமை

Good morning sir!!!
16 கோரஸ்
மூணு வயலின்
இரண்டு ட்ரம் சேர்ந்து வாசித்து வரவேற்றோம்.

ஞானப்பழம் Sir - class teacher எங்கட வகுப்புக்காக எதிர்வரும் காலங்களில் நடக்கும் Staff meeting குகளில் நிறைய அடி வாங்க போகின்றவர். (எனக்கு பட்சி இப்பவே சொன்னது )
பொண்டிங் கட் விட்டால் நன்றாக இருந்திருக்கும்.விடவில்லை.கிளீன் சேவில் இருந்தார்.
அதிகம் அலட்டிக்கொள்ளவில்லை.
எந்தமாதிரியான கரெக்டர் என்று கணிப்பது கஸ்டமாக இருந்தது.
இணைந்த கணிதத்துக்கு உ போட்டு தொடங்கி முடித்தது போய்விட்டார்.
வகுப்பில மொத்தம் 5 ஏவாள் பரம்பரையும் , 16ம் ஆதாம் பரம்பரையும் இருந்தது.

இங்கே இத்தனை மணி இத்தனை செக்கனில் Big bang உருவாகியது வெளியுலகிற்கு தெரியாது.
வகுப்பில முதலில் இருக்கறப்போ சாதுவாய் டிசைன் பிளைச்சுட்டுது .நாங்கள் எல்லாம் முன்னால அவளவயள் எல்லாம் பின்னால என்டு இருந்தாச்சு.சரித்திரமே எங்களை பார்த்து தரித்திரங்கள் என்டு சிரிச்சுக்கொண்டிருந்தது, அங்கே அப்படி இருக்கறத பார்த்து.
அதால "ஏய் பின்னால நாமதான் இருப்போம்" என்று சொல்லுவதற்கு குண்டுக்கோபியை தூதனுப்ப காரணம் இருக்கிறது.அந்த சைட்டில் குண்டுக்கோபியை எதிர்கொள்ளக்கூடிய ஒரு மல்லி(மல்லனுக்கு எதிர்ப்பால் மல்லிதானே?) கஜனி என்ட பேர்ல இருந்ததுதான்.

தன்மையா நாங்க கேட்டத முடியாது என்டு வன்மையாய் கோபியையே திருப்பி அனுப்பிட்டாளுங்க.
கோபியின் முகம் கோபத்தில் சிவந்து போய் கிடக்க.

அடுத்ததா பிளான் B யைப்போட்டு அடுத்தநாள் காலமை அத அமுல்படுத்தினம்.
ஆணாதிக்கம் அதிகரிச்ச இடத்தில் பாரதி வந்தென்ன பார்த்த சாரதி நொந்தென்ன.
அதிகாலைக்கு அண்மையாய் வந்து அவயின்ர இடத்தை ஆட்டயப்போட்டதுக்கு எதிர்த்தாக்கம் கொடுத்து வகுப்பு கூட்டாம அம்மிட்டு இருந்து கொள்ள

போங்கடினுட்டு! நாங்களும் அத மைன்ட் பண்ணல.

இந்த இடத்தில தான்  Sectional head ஜ கொண்டுவந்து அறிமுகம் பண்ண வேண்டும்
எங்களுக்கு ப்சிக்ஸ்க்கும்  பாடம்மும் அவதான் என்ற வசயம் லேட்டாகி ரிவீலான போது...

சியாமா ரீச்சர்.
இனி வரப்போகிற நாட்களில் இவவிடம் பேச்சு வாங்காட்டி எங்களுக்கு ஒரு மாதிரியாய் இருக்கும் என்ற நிலை வரும் போல தெரிந்தது.பேச்சு,அறுவை அத்தனையும் சராமாரியாய் விழும்.ஆனால் கோபமே வராது.கோபம் வர்றப்போல பேசுறதுக்கு அவவுக்கும் முடியாமலிருந்தது என்பதும் ஒரு வகை நிஜம்.வகுப்பாசிரியர் பதவி என்னவோ ஞானப்பழம் சேர் பேருக்குத்தான்.ஆனால் கேர் டேக்கராக டீச்சரை  இருத்திக்கொண்டோம்.ஒரு வகையில் எங்களின் வகுப்பில இருந்த அத்தனை பேரும்  மதிப்பு,மரியாதை,போன்ற இரண்டு விசயங்களை மானசீகமாய் கொடுத்தது இவவுக்கு மட்டுமாய்த்தானிருக்கும்.

"வகுப்பு கூட்டலயா இன்னும்?"

என்ன நடக்கும் டிக்,டிக்...டிக்..டிக்

"ம்ம் எழும்பி கூட்டுங்கோ.படிப்பை பிறகு பார்க்கலாம்.உப்புடியே வீட்டையும் இருக்கிறியள்."
தலய குனிஞ்சா அவ சொல்லுறது எல்லாம் மேலால காத்தோட போடும் என்டு ஒரு நமுட்டு நம்பிக்கையை பாலோ பண்ணிணேன் நான் + மீதி எல்லாரும்.
கொஞ்சத்தால மண்டைக்கண்ணால் பார்க்க தும்புத்தடி ஆடுவது தெரிந்தது.
பெண் பாண்டவர்ஸ்ஸே எழும்பி கூட்றாங்க. அட அவ நமக்கு சொல்லடா!
ஒரு வெற்றிச்சிரிப்பு கம
ஒரு நையாண்டிச்சிரிப்புக் கலந்து அவளுகளின் பக்கமாய் அனுப்ப" ரீச்சர் கூட்டுறதுக்கு ரைம் ரேபிள் போடனும்" தர்மாவான் தர்மன் கூட்டிக்கொண்டே குரலெழுப்ப
5 பேரையும் 5 நாளும் ஒவ்வோருத்தராய் போடலாம் என்டு கீச்சிட்டான் குரல்லில் திப்ஸ் என்கிற திவாகரன் காமெடியாய் சொன்னதை டீச்சர் நிஜமாக்கிவிட இன்டேர்வலின்போது ஆளுக்கொரு அல்வா வாங்கி கொடுத்தோம் ஆச்சி கடையில் அவனுக்கு.

இந்த திப்ஸ் என்கிற திவாகரனை
நன்றாய் கவனிக்கவும். அவன் இப்ப இந்த நிமிடத்தில இருந்து ரீச்சர்டயும் நம்ம வகுப்பு கேர்ள்ஸ் கிட்டயும் வாங்க தொடங்கற பேச்சு கடைசி வரை வாங்கிட்டேதான் இருக்க போகிறான்.ஆக்கபூர்வமான அலப்பறைகள் அவனுடையவை.
அதால வகுப்பில அவனை பிடிக்காதவங்கனு யாருமில்லதுதான் அபூர்வம்

இவன் பாடம் நடக்கேக்க ஆரம்பிச்சு விட்டா தொடங்கும் கதை
ஒரு 4,5 நிமிசத்துக்கு ரவுண்ட பண்ணும்
அப்புறம் ரொம்ப நல்ல பிள்ளையாட்டம
.......... ...........
.......... ............
........... கிடையுடன் பந்து அமைத்த கோணம் காண்க?
னு ஒரு கேள்வி எழுதி முடிச்சுட்டு

(மீண்டும் மேலிருந்து வாசிக்க)

அடுத்த பாடம் லாபுக்குடா!!!
வாத்தி வந்துச்சா என்ன? ஒரு பெல் சத்ததுக்கு இப்டி நிறைய கேள்விகள் வரும்.அதுக்கும் மேலால இப்டி கீழால போற லைனைப்பார்த்து ஒருத்தன் கூப்பிடுவான்.

"டேய் கப்பலு, பாய்மரம் எல்லாம் போகுதுடா"

இப்ப ....
டேய் ஸ்ஸ்ஸ் பப்பி தலைய தலைய ஆட்டினான் கீழே பார்த்து
அன்னதானத்துக்கு  அடிபட்டு பார்ப்பது கீழால சங்கீதபாடத்த்துக்கு லைனாய் ஒரு லைன் போகும் அதில்  ஒண்ணு,இரண்டு.... ம்ம் .?..நாலு சூப்பர் மூணு பரவால்ல இரண்டு மட்டம்.

இப்டி
மேல் மாடில நிண்டு ....ரேட்டிங் போட்றதுக்கும்
கீழால சங்கீதம் படிக்க போற பொண்ணுங்கள பார்த்தே எங்களோட சங்கீத திறமைய வளர்த்து கிட்டதுக்கும் ஒரு பாரிய உதவி செய்தது எதிர்தாப்புறத்தில இருந்த மரம்.அந்த மரம்தான் இப்டி அதில நிண்டு பார்க்றத அதிபர் பார்க்காம மறைச்சது .பசுமை காக்க வேணும் என்பது நிஜம்தான் பல விடயங்களில்

அந்த லைன்ல போற ஒரு பொண்ணு இருந்திச்சு. மேல நாம நிக்கிறத  எப்படியும் பார்த்துவிடுவாள். மண்டகண்ண உருட்டி கொடுப்புக்குள் ஒரு சிரிப்பு சிரிப்பாள் இத பார்த்துட்டு
சூ மந்திரகாளி!!! சொல்லி மறையறது போல உடனடியா நம்மாக்கள் கீழ் படில நிப்பாங்க இங்கதான்  கதையோட டேர்னிங் பாயிண்டே  இருக்கு.
அந்த கிராதகி என்ன பண்ணுவாள் ஒவ்வொருத்தரையும் தனிதனியா பார்த்து சிரிக்கிற மோனாலிசாவாய்  போவாள்.
இறுதி மட்டும் யாரைப்பார்த்து சிரிச்சாள் என்கிறது மர்மமாயே மடிஞ்சுட்டுது
இருந்தாலும் கடோசி வரை பப்பி, டினா, ஞானி னு எவனும் சோர்ந்து போகல.
கதையில் ஹீரோ மட்டும்தானா வில்லன் கிடையாதா என்று கேட்டால் அட...

அடுத்தது பக்கத்து வகுப்பு.

வைர சுரங்கத்தை பார்த்திருக்றீர்களா யாராவது?
நினைக்கிற மாதிரி இலகுவாய் எல்லாம் வைரம் கிடைக்காது அங்கே.
சுத்தி சுத்தி தோண்டணும் ஆங்காங்கே
அப்பப்தான் ஒரு நாலஞ்சு வைரம் கிடைக்கும்.
மீதி பூரா கரி எனப்படும் காபன் கிறபைற்றுதான் இருக்கும்.

சின்ன வயசில தமிழ் படிப்பிச்ச ஞானசம்பந்தன் சேருக்கு கோடி நன்றிகள்.
உவமானம் வைரச்சுரங்கம்
உவமேயம் பக்கத்து வகுப்பு.

அதுவும் அந்த வகுப்பில
ஆலாபலஅங்காலபரமேஸ்வர ரங்கநாயகிணி னு ஒரு பொண்ணு இருக்கு
பொண்ணுணா பொண்ணு அப்படி ஒரு பொண்ணு பேரு மாதிரியே.
ஒட்டு மொத்தமாய் எங்கட வகுப்பு அதிகமா பயப்படுற ஒரு விசயம்னா அது அவள பார்த்துதான்.உருவம் எல்லாம் சுமார்தான்.பட்

64 கலையில இவளுக்கு தெரிஞ்ச கலை ஒண்ணுதான்
போட்டுக்கொடுத்தல்.அவளுக்கு கெல்ப் பண்றதுதான் மிச்ச பாதியோட வேலை அங்க.
பக்கத்து வகுப்பில யாரவாது இத வாசிக்கறப்போ யாராயிருக்கும் என்டு சந்தேகம் வந்தால்,தொடர்பு கொள்ளவும்.ஆளுயுர கண்ணாடி அனுப்பி வைக்கப்படும்.

ஆனா இது எல்லாத்துக்கும் மேலால இன்னுமொன்னுக்கும் மொன்னு விழுங்கிற விசயம் இருந்தது

E...n..g...l...i...sss...hh,

லிட்ரேச்சர் புத்தகம் நாலைந்தும்,வேறேதாவது இங்கிலீஸ் புத்தகம்,ஒரு டயரி,இல்லை ஒரு பைல் கையோடு நெஞ்சில் அணைத்துக்கொண்டு நடக்கும் போது ஒரு மிடுக்கிருக்கும்.

ஜெயவீரசிங்கம் சேர்.

கடைசி வரை அவரோட லைவ்ஃல ஜெயம் காண முடியாம ஏதாவது ஒரு விசயம் குறையா இருக்க போகுதுன்னா அது எங்கள் 16 பேரையும் ஒண்டா சேர்த்து வைச்சு ஒரு நாளவது ஆங்கிலம் படிப்பிக்கேலயே என்றதுதான்.

இப்ப  இங்கிலிஷ்.பாதி பேர் இன்விசிபிளாகிட்டாங்கள்  கண்ணை மூடின ஹப்புக்குள்ள.

அட !பாவிங்களா சொல்லாம கொள்ளாம போட்டாங்களே !
கர்த்தர் அந்த படுபாவிகளை மன்னிக்கட்டும்.
மெதுவா எழும்பினன் கூட இருந்தது
அங்கால,
அதுக்கு, அங்காலனு 2,3 எழும்பிச்சு.
லைப்ரரி ஓ! இல்லை வேறெங்கேயோ!
போகும் வழி தூரமில்லை, இனித்தான் மறைவிடத்தை மூக்கில் விரல் வைத்து பார்க்க வேண்டும்,ஓடும் வழியில்,எழும்பி வாசலுக்கு போக...

"சேர் வெளிகிட்டார் அப்பவே, வந்து கொண்டிருப்பார் " கீர்த்தி என்கிற அந்த கீர்த்திகாவின் தகவல் மண்டைக்குள்ள உறைக்குறதுக்குள்ள

ஆ! உங்கட மரியாத புல்லரிக்குது எனக்கு!
நான் வகுப்புக்கள்ள வந்தாப்பிறகு எழும்பினா காணுமே.இருங்கோ,இருங்கோ.

அப்பம் நக்கின மூஞ்சி எப்படி இருக்கும் என்று நிறைய நாளாய் இருந்த டவுட் கிளியரானது இண்டைக்குத்தான்.ஒருத்தரை ஒருத்தர் பார்த்துக்கொண்டு.

அடுத்த ஆப்பு இறுக்கப்பட்டது!
கடைசியா எந்த செக்சன் பார்த்தனாங்கள்.
இந்த இடத்தில 2 பிரச்சினை வரும்
1.கடைசி செக்சன் தெரியரதுக்கு கடைசி வகுப்பில இருந்திருக்கணும்.
2.இருந்தாலும் அத சொல்ல புத்தகம் வைச்சிருக்கணும்.

அரசாங்கம் இஷ்டத்துக்கு ஒரு புத்தகத்தை சீ.ஆர் கொப்பி சைசில் அடிச்சு விட்டிருக்க,அது யார் வீட்டு மேசையிலும் பட்டிருக்காது.வகுப்பு மேசைக்கு கீழயே முடங்கிவிடும்.முதல் நாள் வைத்து விட்டு போவது அடுத்தநாள் பாடத்துக்கு இருந்தால் சரி இல்லாட்டி பக்கத்து மேசைக்கு கீழ இருக்றதை உருவுறதுதான் வழமையான வழமை.

என் கஸ்டத்துக்கு என் மேசைக்கு கீழே....  கீழ பலகையே இல்ல புத்தகம் எப்படி இருக்கும்.
டேய் புத்தகம் ஒண்டு தாடா!
இழுத்தன் பின்னாலிருந்தவன்ர புத்தகத்த
டர்ர்ர்........
ஸ்ஸ்,பாவனை அதிகமான புத்தகம்
பத்தாக்குறைக்கு நான் ஒற்றைய பிடிச்சு
இழுக்க அவன் புத்தகத்த பிடிக்க
"கிழிஞ்சுது "
புத்தகம்.

உங்களிட்ட புத்தகம் இல்லையோ?
நெற்றிக்கண் திறக்க போகிறது.

புத்தகம் இல்லாட்டி வகு.......

பக்கத்து வகுப்பை பார்த்தன், எதுக்கும் உதவாது.

அடுத்தது சீனியர்ஸோட வகுப்பு,
அங்க தங்கராணி ரீச்சர்
"உங்களுக்கு அசிங்கமாயில்லய புத்தகம் இல்லையெண்ட"
இதில என்ன அசிங்கம் இருக்கெண்டு எனக்கு புரியல .

அங்கயும்,
புத்தகம் இல்லாத ஆட்கள் வகுப்........

அந்த வசனத்தை கேக்கிறதே அசிங்கம் என்று நினைக்கும் போது முழுசா எழுதவா முடியும்.

இப்ப புத்தக வேட்டையில் நிறையப்பேர் இணைய. உண்மைல என்ன பிரச்சினை எண்டா எந்த வகுப்புக்கு முதல் நாள் கடோசியா இங்கிலிஷ் நடந்துச்சோ அங்க எல்லா புத்தகமும் கிடக்கும் அத தேடி பிடிச்சா சரி.ஒரு மாதிரி பயோ வகுப்பில தண்டிட்டு வந்நு இருந்தன்.
பாதி இன்னும் வரல.

இப்போது வகுப்பை வடிவாய் பாத்தால்
இருக்கற எல்லாரும் தலைய குத்தி போன நூற்றான்டில் இறந்த மார்டின் லூதர் கிங்குக்காக கவலைப்பட்டு கண்ணீர் அஞ்சலி செலுத்தி ஏதாவது எழுதிகொண்டிருப்பார்கள்.
நிமிரவே மாட்டாங்கள்.

பீனோலட பென்சீன் டை அசோனியம் குளோரைட்டை கலக்க,வட்டத்த நிமிர்கோணத்தில் வெட்டி, சாரீரப்பதனை காண்க
அப்டினு சுத்தி வர கேட்கிற எல்லா சத்ததுக்குள்ளாலயும் advantages of tra......என்டு கொஞ்சம்  இங்கிலிசூம் கேட்கும் .

நானும் மத்தவங்களை போல தலய குத்தினன்
எழுத கூடிய மாதிரி ஒரு இடமா புத்தகத்தில எடுத்தன்.

அவளும் நானும்
அந்தி சாயும் நேரம்
கடற்கரையில் கால் நீட்டியிருந்தோம்,.
நான்தான் அஸ்தமன சூரியன் என்றேன்
அவள் ஏன்? என்றாள்
புரியவில்லையா
உன்னைத்தான் சந்திக்க போகிறேன் இரவுக்கு.

டேய் இத, பார்! ஐங்கி நோண்டினான்.
அவன் புத்தகத்தில் குண்டுக்கோபின்ற சைட் போஸ்.
The hulk.
இப்படி ஒவ்வொருதன் புக்கும் ஒரு கலைக்கூடமாயும் இருக்கும்.ஒவ்வொருத்தனும் பிக்காசோவாயும்,வேட்ஸ்வேர்தாயும் இருப்பான்.அந்த ஆங்கிலேயரின் மொழி நேரத்தில்.

சேர், எக்ஸ் கியூஸ் மீ!
நிமிர்ந்தோம்...........

அன் இன்ரூடர்.

எல்லா தலையும் நிமிர்ந்தது.
அட! ஆலாபலணா
(அவள் பேரை இப்படி வச்சுக்கங்க ரைப் பண்ண கை நோகுது)
எவன் தலையில் எள்ளரைக்க போறாளோ இண்டைக்கு .


டாடா அடுத்த எபிசோட்டுக்கு பறக்கவும்.....

No comments:

Post a Comment